Prayer

வரம் தரும் வல்லமை ஜெபம்

புதுமைகள் பல புரிய அருள்பெற்ற சித்தலை புனித அந்தோணியாரே!
குழந்தை இயேசு கையில் ஏந்தும் பேறுபெற்றவரே! துன்பப்படுவோரையும்,
ஏழைகளையும், நோயாளிகளையும், ஆதரவற்றவர்களையும்
அன்புடன் அரவணைக்கும் நேசத்தந்தையே,அசைக்கமுடியாத முழு நம்பிகையுடன்
ஜெபிக்கும் எங்கள் மன்றாட்டுகளுக்கு செவிசாய்த்தருளும்.

எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்தருளும், நாங்கள் ஒருவரை ஒருவர்,புரிந்துகொண்டு,
மன்னித்து,ஏற்றுக்கொண்டு அன்புசெய்து வாழ அருள்தாரும். நாங்கள் செய்யும் வேலை,தொழில்
மற்றும் வியாபாரத்தை ஆசீர்வதித்தருளும்.எம் பெற்றோர்களுக்கு நல்ல உடல் நலத்தையும்,
இளையோர்களுக்கு சிறந்த எதிர்காலத்தையும்,படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானத்தையும்
குழந்தைபாக்கியம் இல்லா தம்பதிகளுக்கு குழந்தை செல்வத்தையும்,எமது குடும்பத்தில்
பொருளாதார முன்னேற்றத்தையும்,பல்வேறு நோய்களால் துன்பப்படும் நோயாளிகளுக்கு
பூரண சுகத்தையும் தந்தருளும்.

எங்கள் பாதுகாவலரான சித்தலை புனித அந்தோணியாரே!எமது வாழ்வில் இருக்கும்
துன்பங்கள்,கண்ணீர் கவலைகள்,பிரச்சனைகள்,சோதனைகள்,மனவேதனைகள்,
கடந்தொல்லைகள்,தீராத உடல் நோய்கள் அனைத்தையும் உமது வல்லமை நிறைந்த
பரிந்துரையால் எங்களிடமிருந்து நீக்கியருளும்.

-ஆமென்.

 
இடைவிடா சகாயத்தாயிடம் ஜெபம்

இயேசுவின் அன்னையும்,எங்கள் அன்னையுமான
ஒட்டியம்பாக்கம் இடைவிடா சகாயத்தாயே,
எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அன்பும் சமாதானமும் தாரும்,
பிள்ளைகளுக்குப் படிப்பும்,பக்தியும்,பணிவும் தாரும்.
இளைஞர்,இளம்பெண்கள் வேலை வாய்ப்புப் பெறவும்,
திருமண வாழ்வு நிறைவாய் அமையவும் அருள்தாரும்.
ஆபத்துக்களிலிருந்து, நோயிலிருந்து,தீவினைகளிலிருந்து காத்தருளும்.
தொழிலை விவசாயத்தை,வியாபாரத்தை,படிப்பை
ஆசிர்வதித்து நல்ல பலனைத் தாரும்.
அன்னையே உம்மைப் போன்று வாழ வரம் தாரும்.

-ஆமென்.

St. Anthony's intercessory power before our God is awesome.
Please join our on-line prayer community.
Post your prayer or pray for the intentions of others.
 
 
 
 
 
   Can't read the image? click here to refresh
Enter the Code above :